1950-களில் பத்திரிகைத் தொடராக வெளி வந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார்.
unknown node10-ஆம் நூற்றாண்டில் சோழப்பேரரசின் அரியணைக்காக நிகழ்ந்த உட்பூசல்களையும், துரோகங்களையும், தியாகங்களையும் அடிப்படையாகக் கொண்டு, இளவரசன் அருண்மொழிவர்மன் பேரரசன் ராஜ ராஜனாகப் பதவியேற்று, சோழர்களின் பொற்காலத்தை உருவாக்கும் முள் நிகழும் ஒரு சுவாரசியமான சாகசக் கதை தான் பொன்னியின் செல்வன்.
unknown nodeஇப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeஇந்த படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.
unknown nodeஇந்த நிலையில், இந்த திரைப்படத்தின் டீசர் நாளை சென்னையில் வெளியாகிறது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தி நாளை மாலை 6 மணி அளவில் படத்திற்கான டீசர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.