இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் “கோப்ரா”. படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
unknown nodeபடத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத விதமாக பல வித்தியாசமான கெட்டப்களில் இந்த படத்தில் விக்ரம் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் மீது பலத்த எதிர்பார்புகள் உள்ளது.
unknown nodeகடந்த ஆண்டே இந்த படம் வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றே போனது. அதன்பிறகு ஒருவழியாக வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்த நிலையில், தற்போது விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ஒரு அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 11-ஆம் தேதி சென்னை பீனிக்ஸ் மாலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Grand Audio Launch Of #Cobra on July 11 at #PhoenixMarketcityChennai#PalladiumChennai with the PRESENCE OF #CHIYAANVIKRAM ????
An @arrahman Musical ????
An @AjayGnanamuthu Film ????@Udhaystalin @RedGiantMovies_ @IrfanPathan @SrinidhiShetty7 @SonyMusicSouth #CobraAudioLaunch pic.twitter.com/bqIgAGR5Cm— Seven Screen Studio (@7screenstudio) July 8, 2022