விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இடம்பெற்றுள்ள முருகா என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று யாதும் ஊரே யாவரும் கேளிர். இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் .மேலும் இந்த படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே படப்பிடிப்பை முடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன்,யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியானது.
இந்த அப்டேட்டை தொடர்ந்து ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட் கொடுக்கும் வகையில் படத்திற்கான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு வெளியீடவுள்ளனர். ஆம் நாளை மாலை 6 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முருகா என்ற பாடல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.
unknown node