பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா லிகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மைக் டைசன், மகரந்த் தேஷ்பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown nodeதர்மா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க, இசையமைப்பாளர்கள் பின்னை இசை மணி சர்மா, பாடல்கள் விக்ரம் மாண்ட்ரோஸ், தனிஷ்க் பாக்சி ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeஇதுவரை இல்லாத விதமாக விஜய் தேவரகொண்டா இப்படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனாலே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த நிலையில், தற்போது படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியிடபட்டுள்ளது. போஸ்டரில் விஜய் தேவரகொண்டா தனது கையில் ரோஜாப் பூ கோந்தை கையில் பிடித்தபடி நிர்வாணமாக போஸ் கொடுப்பதைக் காணலாம். இந்த புத்தம் புதிய போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeஇது தொடர்பாக விஜய் தேவரகொண்டா கொண்டா தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது “இந்த லிகர் திரைப்படம் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டது. மனதளவிலும், உடல் அளவிலும் இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலானது” என குறிப்பிட்டுள்ளார்.
A Film that took my everything.
As a performance, Mentally, physically my most challenging role.I give you everything!
Coming Soon#LIGER pic.twitter.com/ljyhK7b1e1— Vijay Deverakonda (@TheDeverakonda) July 2, 2022
இந்த போஸ்ட்டரை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு முன்பு அமீர்கான் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பி.கே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை ஒப்பிட்டு அமீர்கானை அப்படியே ஃபாலோ செய்த விஜய் தேவரகொண்டா என தெரிவித்து வருகிறார்கள்.