சென்னை : 2025 ஆஸ்கரில் ‘சிறந்த வெளிநாட்டு படங்கள்’ பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண் ராவ் இயக்கி ஹிந்தியில் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான ‘லாப்பத்தா லேடீஸ்’ அனுப்பப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியான 28 படங்களோடு போட்டியிட்டு ‘லாப்பத்தா லேடீஸ்’ வெற்றி பெற்றுள்ளது. கான் திரைப்பட விழாவில் விருது வென்ற ‘All We Imagine As Light’ படமும் இந்த போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. India’s Official […]
மகாராஜா : பொதுவாகவே சினிமாவில் ஒரு மொழியில் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகிவிட்டது என்றாலே அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது உண்டு. அப்படி தான், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அவருடைய 50-வது படமான ‘மகாராஜா’ படம் ஹந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியான இந்த திரைப்படத்தினை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி இருந்தார். படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மந்தா மோகன்தாஸ், சிங்கம்புலி, நடராஜன் சுப்ரமணியம், வினோத் சாகர், […]
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடிங்கியுள்ளது. பலரும் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில், என்னுடைய வீட்டில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வருகிறது. தண்ணீரின் நிலைமை […]
அமீர் கான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது என்றே கூறலாம். வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்த்து. இந்த நிலையில், பிரபல நடிகையான கங்கனா ரனாவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் “லால் சிங் சத்தா” படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்று தான் மக்கள் எதற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த […]
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கான் தற்போது “லால் சிங் சத்தா” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்க, அமீர்கானே தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் […]
பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா லிகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மைக் டைசன், மகரந்த் தேஷ்பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தர்மா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க, இசையமைப்பாளர்கள் பின்னை இசை மணி சர்மா, பாடல்கள் விக்ரம் மாண்ட்ரோஸ், தனிஷ்க் பாக்சி ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இந்த […]
கே.ஜி.எஃப்-2 திரைப்படத்துடன் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சதா எனும் திரைப்படமும் ஏப்ரல் 14இல் வெளியாக உள்ளது. அதே தினத்தில் பீஸ்ட், விக்ரம் படமும் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாம். வரும் 2022 கோடை விடுமுறையில் இந்திய சினிமாவில் ஒரு சினிமா யுத்தமே நடக்க போகிறது போல,! அந்த அளவிற்கு படங்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே வெகுநாட்களாக காத்துக்கொண்டிருந்த கே.ஜி.எஃப் படத்தின் 2ஆம் பாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது. […]
பிறந்தநாள் தினத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சோஷியல் மீடியாக்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான்.அவர் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் . அவருக்கு ரசிகர்களும் , பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்த அமீர்கான் இது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடைசி பதிவு என்றும் ,தான் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.இவரது இந்த […]
பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் தாயாருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறியுள்ளார். பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். மேலும் தனது தாயாருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான ரிசல்ட்டை அறிய எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், நெகட்டிவாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருவதாகவும் கூறியிருந்தார் . இந்நிலையில் மேலும் மும்பை சுகாதார துறை […]
பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,” எனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்கள் […]
அமீர்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில் நண்பர்களே, நான் கோதுமை பாக்கெட்டில் பணத்தை வைக்கவில்லை என்று ட்வீட் செய்துள்ளார். கொரோனா தொற்றால் உலக நாடுகள் பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமீர்கான் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு […]
ஊரங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நூதன முறையில் கொரோனா நிவாரணம் கொடுத்த நடிகர் அமீர்கான். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களை வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அன்றாட உணவுக்கு தவித்து வருகின்றன. மேலும் பொருளாதாரத்தில் நாடு கடுமையான சரிவை சந்தித்துள்ளது. பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க நிவாரணம் […]
நடிகர் அமீர்கான் இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் , மேலும் தற்பொழுது சில புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார் இந்த நிலையில் நடிகர் அமீர்கானை குற்றவாளியென கூறி பாகிஸ்தான் ஒரு தனியார் டிவி சேனல் இவரின் புகைப்படத்தை வெளியிட்டது மேலும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த டிவி சேனல் ஒன்று நேற்று முன்தினம் 17 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான அமீர்கான் பிடிப்பட்டார் என்று கூறி குற்றவாளி அமீர்கானின் […]
பாலிவுட் நடிகர் அமீர்கான் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் ஷூட்டிங்கிற்க்காக வந்துள்ளார். அவர் இளைஞர்களுக்கு போதை பழக்கத்தில் இருந்து தள்ளியிருங்கள் என அறிவுரை கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் ஆமீர்கான் ஷூட்டிங் தொடர்பாக தமிழ்நாட்டிற்க்கு வந்துள்ளார். ராமநாதபுரம் தனுஷ்கோடியில் ஷூட்டிங் வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இவரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இளைஞர்களுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு அமீர்கான், ‘ இளைஞர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். போதை பழக்கத்தில் இருந்து தள்ளியே இருங்கள். போதை […]
பிரதமர் மோடி வீட்டில் கடந்த மாதம் 29ஆம் தேதி திரை பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு விருந்தளிக்கப்பட்டது. அந்த விருந்து நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அவ்விருந்து விழாவில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களும் கலந்துகொண்டார். அவர் மோடி வீட்டிற்கு சென்றபோது, பாதுகாவலர்கள், எஸ்.பி.பியை மறித்து அவரை செக் செய்து, அவரிடம் இருந்த செல்போனை வாங்கிக்கொண்டு டோக்கன் கொடுத்து அனுப்பினர். ஆனால், பாலிவுட் பிரபலங்களிடம் இருந்த செல்போன்களை பாதுகாவலர்கள் வாங்கவில்லை. பாலிவுட் பிரபலங்களான அமீர் […]
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இவரது நடிப்பில் கடைசி விவசாயி, லாபம், சங்கத்தமிழன், சைரா நரசிம்ம ரெட்டி, மார்க்கோனி மத்தாய் ( மலையாளம்). என பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது, பாலிவுட்டிலும் நடிக்க உள்ளாராம். அதுவும் அமிர்கான் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவராகவே கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது […]
பாலிவுட்டின் நடிகர் , இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட அமீர்கான் பிறந்தநாள் இன்று! இந்திய சினிமா மார்கெட்டை சீனா வரை விரிவுபடுத்திய பெருமை அமீர்கானையே சேரும்! ஒரு படத்திற்காக 120 கிலோவிற்கு மேலேயும், 70 கிலோ வரையிலும் உடல் எடையை மற்றி நடித்தவர் இந்த 54 வயது இளைஞர் அமீர்கான்! பாலிவுட் சினிமாவில் பல புதிய கதைகளங்களை தேர்வு செய்து நடித்து, புதிய கதைகளங்களை உருவாக்கி இயக்கி ரசிகர்கள் மனதில் நிற்கிறார் நடிகர் அமீர் […]
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அண்மையில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார். இவர் அடுத்ததாக பாலிவுட் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. அடுத்ததாக இயக்க போகும் படத்தில் பாலிவுட் முன்னனி நடிகர் அமீர்கான் நடிப்பதாக தகவல் கிடைத்தன. ஆனால் தற்போது வந்த செய்தியின்படி, நேபாள பழங்குடி இன போராளி ஒருவரின் வாழ்கை வரலாறை படமாக எடுக்க உள்ளதாக தறபோது செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. Source : tamil.CINEBAR.IN
அமீர் கான் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான தங்கல் திரைப்படம் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி அடைந்தது. பெண்கள் குஸ்தியை மையபடுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுக்க நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அமீர் கான் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இப்படம் ஹிந்தியில் ரிலீஸாகும் போதே தமிழ்நாட்டிலும் டப் செய்யபட்டு ரிலீஸானது. ஆனால் தீபாவளியன்று சர்கார் படம் ரிலீஸுனதால் இந்த படத்திற்கு போதிய […]
இந்த தீபாவளியன்று தமிழில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும்.எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஹிந்தியில் அமிதாப்பச்சன், ஆமீர்கான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இப்படம் தற்போது தமிழிலும் டப்பிங் செய்யபட்டு ரிலீஸாக உள்ளது. இதற்க்கு புரோமோட் செய்யும் வகையில் அமிதாப், அமீர்கான் […]