ரோஹிணி திரையரங்க விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது – வெற்றிமாறன் காட்டம்

பத்து தல படத்தை பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டதற்கு இயக்குனர் வெற்றிமாறன் காட்டம்.

பத்து தல படத்தை பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டதற்கு இயக்குனர் வெற்றிமாறன் காட்டம்.

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிம்பு நடிப்பில் நேற்று வெளியான ‘பத்து தல’ படத்தின் முதல் காட்சிக்கு, நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவர் டிக்கெட் எடுத்து திரையரங்கிற்குள் வந்துள்ளனர். ஆனால், டிக்கெட் இருந்தும் இருவரை ரோகிணி திரையரங்க ஊழியர்கள் உள்ளே விட மறுத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், பலரும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் படம் பார்க்க அனுமதிக்காத புகாரில் ரோகிணி திரையரங்க பணியாளர் குமரேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ரோஹிணி திரையரங்க விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில்  இயக்குனர் வெற்றிமாறன் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுயிருக்கிறார். அதில், நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால், இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைப்பிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

unknown node