நாமினேஷனில் எஞ்சியுள்ள 3 பேர்.! இதில் தங்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது யாரை.?

Remaining 3 people are left in the nomination and who do you think should stay in the Bigghouse to ask the Bigg Boss contestants

நாமினேஷனில் எஞ்சியுள்ள சம்யுக்தா, அனிதா மற்றும் சுசித்ரா ஆகியோரில் யார் பிக்பாஸ் வீட்டில் தங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேட்க பெரும்பாலானோர் சம்யுக்தாவை கூறியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது.இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஆரி,ரியோ,சோம்,அனிதா , பாலாஜி, சம்யுக்தா மற்றும் சுசித்ரா ஆகியோர் தேர்வாகியிருந்தனர் .அந்த வகையில் நேற்றைய தினம் நாமினேஷன் பட்டியலில் இருந்து ஆரி மற்றும் ரியோ அதிக வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டனர் .

அதனையடுத்து இன்றைய பிக்பாஸ் செக்கனட் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் சோம் காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார் . இந்த நிலையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் மீதமுள்ள பாலாஜி, சம்யுக்தா, அனிதா மற்றும் சுச்சி இருக்க பாலாஜி காப்பாற்றப்பட்டு மூவர் எஞ்சியுள்ளனர் .இதில் யார் தங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேட்க , பெரும்பாலானோர் சம்யுக்தாவை கூறியுள்ளனர் .

அதனையடுத்து இதில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்று கூறி எவிக்ஷன் கார்டை காட்டுவதோடு புரோமோ முடிவடைகிறது . இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுசித்ரா வெளியேறுவார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.மூவரில் யார் என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.

unknown node