தனுஷ் ரசிகர்களுக்கு தொடர்ந்து குவியும் அப்டேட்... "அட்ரங்கி ரே" ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Adrangi Ray starring Akshay Kumar, Dhanush and Sara Ali Khan, release on August 6 The crew has announced that it will be released in theaters

அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள அட்ரங்கி ரே திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அட்ரங்கி ரே. டி சீரிஸ் நிறுவனம் வழங்கும் இந்த படத்தை கேப் ஃ குட் பிலிம்ஸ் ஆப் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மதுரை, டெல்லி, உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த திரைப்படம் நடிகர் தனுஷிற்கு 3வது பாலிவுட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தனது நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் அப்டேட் தொடர்ந்து வருவதால் அதனை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

unknown node