சுல்தான் படத்தின் லாபம் இத்தனை கோடியா..??

Sultan is reported to have made a profit of Rs 27 crore before the release of the film

சுல்தான் படம் வெளியாவதற்கு முன்பே 27 கோடி லாபம் செய்துள்ளதாக தகவல்.

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் விகேவ் மேர்வின் பாடலுக்கு மட்டும் இசையமைத்துள்ளனர். மேலும் பின்னணி இசை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை 430 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் 40 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் 67 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தற்போது வரை 27 கோடி லாபம் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நாளை வெளியாகும் சுல்தான் படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் உற்சாகத்துடன் காத்துள்ளார்கள்.

சுல்தான் படத்தின் லாபம் இத்தனை கோடியா..??