‘எனிமி’ திரைப்படத்தின் மிரட்டலான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்..!!

Producer Vinod has said that the teaser of the Enemy movie will be released in the next two weeks.

அடுத்த இரண்டு வாரங்களில் எனிமி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக ‘எனிமி’ எனும் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தினை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கியஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தை வினோத் என்பவர் தயாரித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான டீசர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.

ஆம், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது வரை 70% முடிந்துள்ளதாகவும், 10 % படப்பிடிப்பு மட்டும் சென்னையில் வைத்து நடைபெறவுள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களில் படத்திற்கான டீசரும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

unknown node