நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது “மிஸ்டர்.லோக்கல்” படம் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார்.
இதையடுத்து தற்போது “மிஸ்டர்.லோக்கல்” படத்தை பார்த்து விட்டு பல ரசிகர்கள் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் இந்த படத்தை ஏன் இப்படி எடுத்து விட்டார் என்று பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இயக்குனர் ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஏன் சீரியசான படங்களை எடுக்க வில்லை என்பது பற்றி பேசியுள்ளார். மேலும் அவர் “நான் சீரியஸான கதை எழுதி வைத்தால் அதற்கு தயாரிப்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள்.அந்த படத்தை நான் தான் தயாரிக்க வேண்டும் ” என்று கூறியுள்ளார்