தளபதியின் மாஸ்டர் பட சம்பளம் இத்தனை கோடியா.? விஜய் சேதுபதிக்கு தளபதியை விட குறைவா.?

It has been reported that Vijay has been paid Rs 80 crore for the master film and Vijay Sethupathi has been paid Rs 10 crore.

மாஸ்டர் படத்திற்காக விஜய் ரூ.80 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும், விஜய் சேதுபதி ரூ.10 கோடி வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.இதுவரை உலகளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் மக்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது.

25 நாட்களை கடந்து வெற்றி நடை போடும் மாஸ்டர் படத்திற்காக பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் மாஸ்டர் படத்திற்காக தளபதி விஜய் ரூ.80 கோடி வாங்கியுள்ளார்.மேலும் விஜய் சேதுபதி ரூ.10 கோடியும் , அனிருத் ரூ.3.5 கோடியும் , இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரூ.2 கோடியும் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.