மாஸ்டர் படத்தின் ஆல்பம் அனைத்தும் யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத் தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. 50 வது நாளாக மாஸ்டர் படம் வெற்றிகரமாக ஓடி வந்ததால் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி தீர்த்தனர்.
இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு பாடல்கள் மற்றும் படத்தில் பின்னணி இசை மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த படத்திலிருந்து வெளிவந்த அணைத்து பாடல்களும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்தின் ஆல்பம் அனைத்தும் யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.