ஒரு காலத்தில் காரை துடைத்தவர்,இப்போது காரையே வாங்கிட்டார்.!'குக் வித் கோமாளி' புகழின் முதல் படி.!

The celebrity who became famous through the Cook With Comali show has now bought a new car.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் பலர்.அதில் சிவகார்த்திகேயன்,ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரை கூறலாம்.அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளவர் புகழ் .குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

தனது காமெடியால் அனைவரையும் கவர்ந்துள்ள இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.சமீபத்தில் இவர் அருண் விஜய்யின் 33-வது படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன் பின் தல அஜித்தின் வலிமை,தளபதி 65, சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களிலும் புகழ் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது இவர் புது கார் ஒன்றை வாங்கியுள்ளார் .17 லட்சம் மதிப்பிலான அந்த காரை விஜய் டிவி மாகாபாவுடன் இணைந்து புகழ் வாங்க சென்றுள்ளார்.அந்த வீடியோவை தனது யூடுயூபில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.பல கஷ்டங்களை தாண்டி தற்போது தனது வாழ்க்கையின் முதல் படியாக காரை வாங்கியுள்ள இவரது வளர்ச்சியை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

unknown node