மருமகன் இயக்கத்தில் மாமனார்..?? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

It has been reported that actor Dhanush will next direct a new film with actor Rajinikanth.

நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினி காந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வைத்த நிலையில், நேற்றுடன் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் எந்த இயக்குனருடன் இனையப் போகிறார் என்பது குறித்து தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஒரு புறம் தேசிங் பெரியசாமி என்றும் மற்றோரு புறம் கார்த்திக் சுப்புராஜ் என்றும் தகவல்கள் பரவி வந்தது.

அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் , தலைவர் 169 படத்தை நடிகர் மற்றும் ரஜினியின் மருமகனான தனுஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் தனுஷ் அமெரிக்காவில் தி க்ரே மேன் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் தனுஷ் முன்னதாக ராஜ்கிரணை வைத்து பா. பாண்டி என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.