கடைசியாக தாயாருக்கு சித்ரா அனுப்பிய குறுஞ்செய்தி.!

Chitra has finally sent a text message to her mother that she is my husband and will not leave my husband at any time.

கடைசியாக தாயாருக்கு சித்ரா ஹேமந்த் எனது கணவர் , எந்த நேரத்திலும் என் கணவரை விடமாட்டேன் என்ற குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் சித்ராவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தூக்கில் தொங்கினால் கழுத்தில் காயம் ஏற்படலாம் ,எப்படி கன்னத்தில் ஏற்பட்டிருக்க கூடும் என்று பல கேள்விகள் எழுந்தது.

அதனை தொடர்ந்து முதலாவதாக அவருடன் தங்கியிருந்த கணவரான ஹேமந்துடன் விசாரணை மேற்கொண்ட போது இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறயிருந்ததாக கூறப்பட்டது .மேலும் அவர் குளிக்க செல்வதாக கூறி ஹேமந்தை வெளியே அனுப்பியதாகவும் கூறப்பட்டது .வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரான கணேசனின் உதவியுடன் மாற்று சாவி உபயோகித்து கதவை திறந்து பார்த்த போது பட்டு புடவையில் தூக்கில் தொங்கியப்படி சித்ராவை கண்டதாகவும் , அதனையடுத்து ஊழியரின் உதவியுடன் ஹேமந்த் சித்ராவை கீழே இறக்கி படுக்க வைத்த பின்னரே காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது.இதில் சித்ரா கணவரை எதற்கு அறையிலிருந்து குளிக்க செல்வதாக கூறி வெளியேற்ற வேண்டும் என்று கேள்விகள் எழுந்து சந்தேகம் போலீசார் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் சித்ராவின் கடைசி வீடியோவில் அவர் போன் பேசி கொண்டிருந்ததை தொடர்ந்து அவரது போனை சைபர் கிரைம் கைப்பற்றியதாகவும் ,அதில் அவர் கடைசியாக தனது தாயாரிடம் தான் பேசியதாகவும் கூறப்படுகிறது . சித்ராவின் தாயார் சித்ராவிடம் திருமணம் ஆகாமல் ஹேமந்துடன் ஒன்றாக தங்குவது குறித்து வாக்குவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த ஒரு மாதமாகவே சித்ராவின் திருமணத்திற்கு குடும்பத்தினர் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பியதாக கூறப்படுகிறது .இந்த நிலையில் நடிகை சித்ரா கடைசியாக தனது தாயாருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் ஹேமந்த் எனது கணவர் , எந்த நேரத்திலும் என் கணவரை விடமாட்டேன் என்று சித்ரா குறிப்பிட்டுள்ளார் .