சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
unknown nodeபடத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்-இந்த மாதிரியான வாய்ப்பு கிடைகிறது ரொம்ப கஷ்டம்… ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஓபன் டாக்..!
unknown nodeஇந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், க்ரேன் விபத்து காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்புநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
unknown nodeஇதனை தொடர்ந்து மீண்டும் இன்று முதல் கமல் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் ஷங்கருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அறிவித்துள்ளார். முறுக்கு மீசையுடன் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Indian2 from today.
@Udhaystalin @shankarshanmugh @LycaProductions @RedGiantMovies_ pic.twitter.com/TsI4LR6caE— Kamal Haasan (@ikamalhaasan) September 22, 2022