ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, கோபிசந்த், கீர்த்தி சுரேஷ், சூரி, மீனா, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சதீஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த பாடல் வீடியோ,
unknown node