வாழை :இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “வாழை” படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் மூலம் மாரி செல்வராஜ் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். ஆகஸ்ட் 23- படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் முதல் சிங்கிள் இன்று (ஜூலை 18) வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தனர். அதன்படி, முதல் சிங்களான ‘தென்கிழக்கு’ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. “பனங்கறுக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கொண்டாடு!பசி மறக்கும் நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு” பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது.
unknown nodeமுன்னதாக, ‘வாழை’ படத்தின் முதல் பாடல் வெளியிட்டு விழாவில், இயக்குனர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் தாணு, நடிகர் கலையரசன், நடிகைகள் திகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
மாரி செல்வராஜ் உடன் கர்ணன், பரியேறும் பெருமாள் ஆகிய படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீராங்கனை மானாதி கணேசனின் நிஜ வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
