இன்று மாலை வெளியாகிறது "அண்ணாத்த" படத்தின் முதல் பாடல் ...!

The first song of the Rajinikanth starrer Annatha will be released today at 6 pm.

இன்று மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, கோபிசந்த், கீர்த்தி சுரேஷ், சூரி, மீனா, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சதீஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதும் இந்த படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. எனவே ரஜினியின் ரசிகர்கள் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியீடுக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்று மாலை வெளியாகிறது "அண்ணாத்த" படத்தின் முதல் பாடல் ...!