வந்துட்டார் லெஜெண்ட்.! ஹாரிஸ் இசையில் முதல் பாடல்..ரிலீஸ் தேதி இதோ..!

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் மட்மே நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது, தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ்

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் மட்மே நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது, தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை நடிகர் அஜித்குமாரை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார்.

படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். அருளிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் மோஷன் போஸ்டரை தொடர்ந்து அடுத்ததாக படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிடவுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஹரிஸ்ஜெயராஜ் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. 9 -ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். அர்மான் மாலிக் இந்த பாடலை பாடியுள்ளார்.

unknown node