மக்கள் செல்வனின் 'க/பெ ரணசிங்கம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.!

விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் க/பெ ரணசிங்கம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான' அழகிய சிறுக்கி ' பாடல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் க/பெ ரணசிங்கம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான’ அழகிய சிறுக்கி ‘ பாடல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று க/பெ ரணசிங்கம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். குணச்சித்திர நடிகரான பெரிய கருப்புத்தேவர் அவர்களின் மகனான விருமாண்டி இயக்கும் இந்தப் படத்தில் வேலராமமூர்த்தி, பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள பர்ஸ்ட் சிங்கிளான ‘அழகிய சிறுக்கி’ பாடல் வெளியாகியுள்ளது. வைரமுத்து வரிகள் எழுத கோல்ட் தேவராஜ் குரல் கொடுத்துள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node