'ஜாக்சன் துரை-2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த தந்தை-மகனான சத்யராஜ் மற்றும் சிபிராஜ் இருவரும் 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஜாக்சன் துரை' என்ற ஹாரர் காமெடி

Jackson Durai-2

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த தந்தை-மகனான சத்யராஜ் மற்றும் சிபிராஜ் இருவரும் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஜாக்சன் துரை’ என்ற ஹாரர் காமெடி படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய தரணிதரன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

தற்போது, இந்த படத்தில் பேயாக நடிக்கும் சத்யராஜின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் அவர் பிரிட்டிஷ் அதிகாரி போல் காட்சியளிக்கிறார், அதன் பின்னணியில் சிபிராஜ் குதிரையில் வருவது போல் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

unknown node

இது, முதல் பாகத்தை இத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் தீவிர நிறைந்த திகில் படமாக இருக்கும். மேலும், இது அதன் தொடர்ச்சி அல்ல என்று கூறப்படுகிறது. இப்படத்தின் கதை இரண்டு காலகட்டங்களில் நடக்கிறது. அதன்படி, நடிகர் சத்யராஜ் இப்படத்தில் மீண்டும் ஒரு ஆவியாக நடிக்கிறாராம், ஃப்ளாஷ்பேக்கில் அவர் பிரிட்டிஷ் அதிகாரியாக வருவராம்.

unknown node

Sathyaraj [Image Source: Twitter/@SriGreen_Offl]

மேலும், இந்த படத்தில் சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார், ஷரத் ரவி மற்றும் மணி எச்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க கல்யாண் வெங்கடராமன் ஒளிப்பதிவு செய்கிறார்.