மிரட்டலான லுக்கில் விஷால்.... எனிமி திரைப்படத்தின் பர்ஸ்ட் லூக்..!

The first look poster of the actor Vishal and Arya starrer Eminimovie has just been released for movie team

விஷால்-ஆர்யா நடிக்கும் எனிமி திரைப்படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக இணைந்து எனிமி என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார்கள். இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைப்பதாகவும் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவியும் , ஆர்யாவிற்கு ஜோடியாக சமீரா ரெட்டியும் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது விஷால்-ஆர்யா நடிக்கும் எனிமி திரைப்படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் ட்வீட்டரில் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

unknown node