ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சிம்புவின் பத்துதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

The first look of the ten-headed film starring Simbu, directed by Krishna, has been released and is well received by the fans.

கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் உருவாகி சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாஃ பி எனும் 2017 ஆம் ஆண்டு வெளியாகிய சிவராஜ் ஸ்ரீ முரளி நடிப்பில் உருவாகிய திரைப்படத்தை இயக்குனர் நாரதன் அவர்கள் இயக்கியிருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தினை தமிழில் பத்து தல எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கொண்டுள்ளது. இந்த படத்தினை தமிழில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்க, சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா அவர்கள் இயக்கி வருகிறார்.

இந்த பத்து தலை படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அசுரன் படத்தில் நடித்த டிஜே அருணாசலமும் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி உள்ளது. தற்போது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நாற்காலியில் சிம்பு கம்பீரமாக அமர்ந்துள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown nodeunknown node