கொரோனாவிலிருந்து குணமடைந்து பின் மனைவியுடன் சூர்யா கலந்து கொண்ட முதல் நிகழ்வு.!

Surya attends an opening ceremony with his wife Jyotika after recovering from Corona.

கொரோனாவிலிருந்து குணமடைந்த பின் மனைவி ஜோதிகாவுடன் சூர்யா திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வருபவர் சூர்யா . சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்று ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.அதனை தொடர்ந்து நவரசா எனும் வெப் தொடரில் நடித்து வந்த இவருக்கு கடந்த பிப்ரவரி 4-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது .

அதன் பின் அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய பின்னர் திறப்பு விழா ஒன்றில் முதல் முறையாக கலந்து கொண்டுள்ளார்.சென்னை பாலவாக்கத்தில் உள்ள பள்ளி திறப்பு விழாவில் மனைவி ஜோதிகாவுடன் சூர்யா கலந்து கொண்டுள்ளார்.கொரோனாவுக்கு பின் சூர்யா கலந்து கொண்ட முதல் நிகழ்வு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் ஜோதிகா கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node