#D43 படத்திற்கான தரமான அப்டேட்... அமெரிக்கா செல்லும் தனுஷ்..?

Preliminary shooting of D43 starring Dhanush and directed by Karthik Narain will end tomorrow

கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் D43 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நாளையுடன் முடிவடையவுள்ளது.

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 43 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் 8 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு நாளையுடன் முடிவடையவுள்ளது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70% காட்சிகள் படமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் கழித்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்குள் நடிகர் தனுஷ் அமெரிக்காவிற்கு சென்று “தி க்ரே மேன்” திரைபடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.