சினிமா உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது விருது வழங்கும் விழா அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கியுள்ளது.
உலக சினிமா கலைஞர்களுக்கு மிக பெரிய உயரிய அங்கீகாரமாக இருக்கும் விருதுகளில் மிக முக்கியமானது ஆஸ்கர் விருது. 95வது ஆக்ஸர் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெறுகிறது.
பினோச்சியோ (Pinocchio) :
unknown nodeதற்போது வரை, சிறந்த அனிமேஷன் படமாக பினோச்சியோ (Pinocchio) திரைப்படம் விருதை தட்டி சென்றுள்ளது. அடுத்ததாக சீன திரைப்படமான எவ்ரிவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All at Once) எனும் படம் தற்போது வரை 2 விருதுகளை வென்றுள்ளது.
எவ்ரிவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் :
unknown nodeகே ஹுய் குவான் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதையும், அதே திரைப்படத்திற்காக ஜேமி லீ கர்டிஸ்-க்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதும் வழங்ப்பட்டுள்ளது. சிறந்த குறும்படமாக ‘ஐரிஷ் குட்பை’ எனும் படத்திற்கும்,சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை நாவலினி (Navalny) எனும் ஆவண படத்திற்கும் வழங்ப்பட்டது.
நாட்டு நாட்டு :
unknown nodeஇந்தியாவில் இருந்து சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது இறுதி பட்டியலில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான RRR படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடல் ஆஸ்கர் விருதை தட்டி செல்லுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.