இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாக்கி வரும் படம் தான் “தனுசு ராசி நேயர்களே.” இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை ரெபோ மோனிகா நடிக்கிறார்.
இந்த படம் குறித்து ரெபோ மோனிகா அவர்கள் கூறுகையில், ” தன்னை இந்த படத்தில் நடிப்பதற்காக தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், நான் இதுவரை நடித்த படங்களுடன் ஒப்பிடும்போது இந்த படம் முற்றிலும் புதியதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், இப்படம், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் காதல், நகைச்சுவை கலந்த ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.