வலிமை படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய படக்குழு..?

It is reported that the dubbing work of the movie Valimai starring Ajith has started from today.

அஜித் நடித்துமுடித்துள்ள வலிமை படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல்.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார். இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து பர்ஸ்ட் லூக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று காத்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது, ஆம் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மார்ச் 11 ஆம் தேதி வெளியிட வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிசு கிசுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இன்று முதல் வலிமை படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.