வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாஸ்டர் படக்குழு..!

The plan is to release the master movie in theaters. The release of the master film in theaters would be right in the current context.

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படத்தின் டீசர் சன் தொலைக்காட்சியின் யூடுயூப் சேனலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன் , இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற சாதனையையும் படைத்தது.

மாஸ்டர் படத்தினை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில்,  மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடவே திட்டம். மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியாவதை தற்போதைய சூழலில் சரியாக இருக்கும். ஓடிடியிலிருந்து எங்களை அணுகிய போதும் திரையரங்கில் மாஸ்டரை வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம்.ரசிகர்கள் எதிர்பார்க்கும் மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்களும் எதிர்பார்த்துள்ளோம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ் திரைப்படத்துறையை மீட்டெடுக்க திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாஸ்டர் படம் எதில் வெளியீடு எப்போது வெளியீடு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

unknown node