தீரன் படத்தின் சண்டை காட்சிகள் விட வலிமையில் 4 மடங்கு சூப்பரா இருக்கும்..!!

Master Dilip Subramanian has said that Masa will be 3, 4 times stronger than the fight scenes in Deeran.

தீரன் படத்தின் சண்டைக்காட்சிகளை விட 3 , 4 மடங்கு வலிமை படத்தில் மாஸாக இருக்கும் என்று மாஸ்டர் திலீப் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில் 10 நாட்கள் மட்டும் படத்திற்கான படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் இந்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்  திலீப் சுப்பராயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வலிமை படம் குறித்து கூறியுள்ளார். இதில் பேசிய அவர் வலிமை படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் சண்டைக்காட்சிகளை விட 3 , 4 மடங்கு வலிமை படத்தில் மாஸாக இருக்கும். படத்தில் ஒரு காட்சியில் கூட அஜித் டூப் போடாமல் நடித்துள்ளார். படத்தில் ஸ்டண்ட் காட்சியில் அஜித் பைக்கை 140 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.