சிவகார்த்திகேயனின் டான் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளார் .
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் டான் . இதனை அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா , நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, முனீஷ்காந்த்,காளி வெங்கட், பாலா குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி ,ஆர்ஜே விஜய் ஆகியோரும் டான் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது .அதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் பூமிநாதன் கேரக்டரில் வில்லனாக நடிக்கும் எஸ்ஜே சூர்யாவும்,சூரியும் கலந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் டான் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சமுத்திரக்கனி கலந்து கொண்டுள்ளார்.அவரை டான் படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளனர்.இதனை அதிகாரப்பூர்வமாக சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.ஏற்கனவே சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சமுத்திரக்கனி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
unknown node
