சொந்த இடத்தில் யோகிபாபு கட்டிய கோவில்.! கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்.!

Kumbabhishekam was held at the Varagi Amman temple built by actor Yogibabu in his own place.

நடிகர் யோகிபாபு தனது சொந்த இடத்தில் கட்டிய வராகி அம்மன் கோவிலில் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. தற்போது பீஸ்ட, வலிமை, போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரஜினி, அஜித், விஜய், என முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்லை, திருவண்ணாமலை மாவட்டதில் உள்ள மேல் நகரம் பேடு கிராமத்தில் நடிகர்யோகிபாபுதனது சொந்த இடத்தில் அம்மன் கோவிலில் ஒன்றை கட்டினார்.அந்த, வராகி அம்மன் கோவிலில் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதில்,யோகிபாபுமற்றும் அவரின் குடும்பத்தாருடன் இணைந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.