சென்னை: துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்துவதற்கு கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியிலான கேள்விகளுக்கு மட்டும் அமைச்சர்கள் பதில் கூறாமல், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டனர். இதில் இன்று முக்கிய முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த கோரி அமைச்சர் கே.என்.நேரு நேற்று […]
KPY – Lawrence: அரசு பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நிதி வழங்கி உதவிய ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா. நடன இயக்குனர் ராகவா லாரன்ஸும் KPY பாலாவும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவி செய்துள்ளனர். விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலா. இதனை தொடர்ந்து அவரை kpy பாலா என்று அழைக்கப்பட்டார். kpy-க்கு பின் […]
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரிவரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஆய்வு செய்து வருகிறது வருமான வரித்துறை. அதன்படி, அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 6 இடங்களில் 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று […]
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செய்யாறு சிப்காட் 3-வது அலகு’ விரிவாக்கத் திட்டத்துக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் சுமார் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விளை நிலங்கள் சட்டத்துக்கு முரணான வகையில் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டி பல்வேறு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே கைவிட வேண்டும் என வலியுறுத்தி மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க செய்யாறு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செய்யாறு சிப்காட் 3-வது அலகு’ விரிவாக்கத் திட்டத்துக்காக சுமார் 3,000 ஏக்கர் விளை நிலங்கள் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி பல்வேறு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 2-ம் தேதி விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே கைவிட […]
வரும் நவம்பர் 26ஆம் தேதி உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2668 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்றும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10 நாள் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா இன்று அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. பஞ்சபூத சிவ ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கடந்த செவ்வாய் கிழமை எல்லை தேவதைகளுககான பூஜையுடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணி அளவில் […]
திருவண்ணாமலை அருகே செங்கம் பக்கிரிப்பாளையம் புறவழிசாலையில் நேற்று இரவு அரசு பேருந்தும், டாடா சுமோ வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள்ளன. திருவண்ணாமலையில் இருந்து டாடா சுமோவில் 11 பேர் பெங்களூர் நோக்கி சென்றுள்ளனர். அதே போல, பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து திருவண்ணாமலை நோக்கி வந்துள்ளளது. அப்போது தான் செங்கம் புறவழிச்சாலை அந்தனூர் பகுதியில் காரும் , அரசு பேருந்தும் பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு விழா மற்றும் கட்சி நிகழ்வில் பங்கேற்க உள்ளார் . முதற்கட்டமாக ஏற்கனவே அறிவித்தது போல, திருவண்ணாமலையில் புதிய பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார். திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு பயன் பெரும் வகையில், அருணை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 600 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் அந்த வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞர் சிலையையும் முதல்வர் திறந்து […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் பைபாஸில் இன்று காலை கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். கர்நாடக பதிவெண் கொண்ட அந்த காரில் பயணித்த 2 சிறுவர்கள், 1 பெண் , 4 ஆண்கள் என அனைவரும் உயிரிழந்துவிட்டனர். அந்தனூர் புறவழி சாலையில் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டு இருந்த லாரி நேருக்கு நேர் மோதியதாக […]
அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம். தமிழ்நாட்டில் அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் அங்கும் திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். அதன்படி, ராமேஸ்வரம் (ரங்கநாத சுவாமி), திருவண்ணாமலை (அருணாச்சலேஸ்வரர்), மதுரை (மீனாட்சி) ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செமீ மழை பெய்துள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் கடந்த 24 மணிநேரத்தில் எந்த மாவட்டத்தில் அதிக மழைபெய்தது என்ற விவரத்தை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி அதிகபட்சமாக […]
திருவண்ணாமலை சென்று திரும்பி கொண்டிருக்கையில் டாடா ஏஸ் வாகனமானது லாரி மீது மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்று கார்த்திகை மகாதீபம் நிகழ்வு திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வை காண தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக திருவண்ணாமலை வந்திருந்தனர். குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வந்துள்ளனர். அதில், செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் , ஞானமணி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் 10 பேர் குட்டியானை எனப்படும் டாட்டா ஏஸ் […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு. திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. பக்தர்களின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாகவும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி தீபத்திருவிழா […]
திருவண்ணாமலையில் பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டால், அதற்கு அனுமதி கொடுத்த அணைத்து அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று தனது ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி ஊழியர்கள் என அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் பேசுகையில், ‘ திருவண்ணமலை ஓர் ஆன்மீக நகரம். நாள் தோறும் இங்கு வெவ்வேறு ஊர்களில் […]
தந்தூரி சிக்கன் சாப்பிட்டு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் உணவகத்துக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு காவல்துறை பரிந்துரை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12ம் வகுப்பு மாணவர் திருமுருகன் (வயது 17) என்பவர் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என அந்த மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார் என தகவல் கூறப்பட்டியிருந்தது. கடந்த 24-ஆம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பின் மாணவனுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட […]
12-ஆம் வகுப்பு இறுதித்தேர்வு முடித்துவிட்டு சக நண்பர்களுடன் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு. கடந்த மாதம் கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30 -க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி மட்டும் சிகிச்சை […]
ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு இரட்டை ஆயுள் மற்றும் ரூ.16000 அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை அருகே போளூரில் கடந்த 2007-ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நடிகர் யோகிபாபு தனது சொந்த இடத்தில் கட்டிய வராகி அம்மன் கோவிலில் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. தற்போது பீஸ்ட, வலிமை, போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரஜினி, அஜித், விஜய், என முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில்லை, திருவண்ணாமலை மாவட்டதில் உள்ள மேல் நகரம் பேடு […]
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்தார். தமிழகத்தில் வருகின்ற 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தற்போது அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரன் ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் […]
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த ம ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே,பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து கட்டுபாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி […]