இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.
unknown nodeபடத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இன்று காலைகமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியீட்டு தனது நன்றியை தெரிவித்திருந்தார். அதில் பெயர் தெரியாமல் படத்தின் பின்னணியில் வேலைசெய்த அனைவருக்கும் பாராட்டுக்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியதுதான் நியாயம் எனவும் தெரிவித்திருந்தார்.
unknown nodeஇது வெறும் பாராட்டாக மட்டும் இருக்கவேண்டாம் என்று, கமல்ஹாசன் “விக்ரம்” படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் என்ற சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து “விக்ரம” படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் 13- பேருக்கு ” TVS Apache RTR 160″ பைக்கை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்,