மறைந்த சித்ராவின் உடல் இன்று பிரேத பரிசோதனை.!

The body of Chitra, who committed suicide, is said to be under autopsy today.The inquest into Chitra's death is continuing for the 2nd day.

தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் சித்ராவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலாவதாக அவருடன் தங்கியிருந்த கணவரான ஹேமந்துடன் விசாரணை மேற்கொண்ட போது இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறயிருந்ததாக கூறப்பட்டது .இது கொலையா ?தற்கொலையா என்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது .இந்த பிரதே பரிசோதனை அறிக்கை மூலம் சித்ராவில் மரணத்தில் உள்ள மர்மம் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சித்ராவின் மரணம் தொடர்பாக சித்ராவின் கணவர், பெற்றோர் மற்றும் சக நடிகர்களிடம் தொடர்ந்து 2-வது நாளாக விசாரணை நடந்து வருகிறது.