நான் உலக அளவில் பிரபலமாவது கடவுள் எனக்கு கொடுத்த வரம் : நடிகர் வடிவேலு

ஒரு முகநூல் பக்கத்தில், சுத்தியல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, விக்னேஷ் பிரபாகர் என்பவர், 'ப்ரெண்ட்ஸ்' திரைப்படத்தில் வரும் காமெடி காட்சியை குறிப்பிட்டு

ஒரு முகநூல் பக்கத்தில், சுத்தியல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, விக்னேஷ் பிரபாகர் என்பவர், ‘ப்ரெண்ட்ஸ்’ திரைப்படத்தில் வரும் காமெடி காட்சியை குறிப்பிட்டு கமெண்ட் செய்திருந்தார். இதனையடுத்து, அனைத்து சமூக வலைத்தளங்களிலும் #pray for nesamani என்ற ஹெஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து கூறிய நகைசுவை நடிகர் வடிவேலு, எல்லாவற்றுக்கும் எனது படத்தை மீம்சாக பயன்படுத்துகின்றனர் என்றும், நான் உலக அளவில் பிரபலமாவது கடவுள் எனக்கு கொடுத்த வரம் என்றும் கூறியுள்ளார்.