வீட்டிற்கே தேடி வந்த விருது.! நெகிழ்ச்சியில் சூர்யா – ஜோதிகா.! Unboxing வீடியோ உள்ளே.!!

கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . விமான நிறுவனத்தை நிறுவிய

சூரரை போற்று-க்கு கிடைத்த சிறந்த திரைப்படத்திற்கான விருதை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா Unboxing செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . விமான நிறுவனத்தை நிறுவிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் சூரரைப் போற்று திரைப்படமும் மற்றும் சிறந்த நடிகர் சூர்யா என இரு விருதுகளைத் வென்றது. இதனையடுத்துசூரரைபோற்று-க்கு கிடைத்த சிறந்த திரைப்படத்திற்கான விருது நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு டெலிவரி ஆகியுள்ளது. அதனை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா Unboxing செய்துள்ளனர். அதற்கான வீடியோவை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம் வெளியிட்டுள்ளது.

unknown node