தளபதிக்கு ஜோடியாக ரஷ்மிகா செய்த செயல்.! 'தளபதி-65' ஹீரோயின் இவரா.?

It has been reported that Vijay will be paired with Rashmika Mandana in thalapathy 65

தளபதி-65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் ‘தளபதி65’ படத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகி பாபு மற்றும்VTV கணேஷ் ஆகியோரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த படத்திறீகாக விஜய் இரண்டு மாதம் கால்ஷீட் கொடுத்து உள்ளதாகவும்,இரண்டே மாதங்களில் படத்தினை எடுத்து முடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏப்ரல் மாதத்திலிருந்து படப்பிடிப்பை துவங்கவுள்ள தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது ரஷ்மிகா மந்தானா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ஹீரோயின் குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது தளபதி-65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதற்காக தான் நடிக்கவிருந்த தெலுங்கு படத்திலிருந்து ரஷ்மிகா விலகியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே இவர் பல பேட்டிகளில் தனக்கு பிடித்த நடிகர் விஜய் என்றும் ,அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தளபதிக்கு ஜோடியாக ரஷ்மிகா செய்த செயல்.! 'தளபதி-65' ஹீரோயின் இவரா.?