தாத்தா வந்தாரு கதறவிட்டாரு....இந்தியன் 2வுக்கு குவியும் எதிர்மறை விமர்சனங்கள்!!

இந்தியன் 2 : இந்தியன் படத்தின் முதல் பாகம் பிரமாண்ட ஹிட் ஆன நிலையில், இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2-வது பாகத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த

indian 2

இந்தியன் 2 :இந்தியன் படத்தின் முதல் பாகம் பிரமாண்ட ஹிட் ஆன நிலையில், இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2-வது பாகத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த இரண்டாவது பாகத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரம்மானந்தம், எஸ்.ஜே.சூர்யா, குல்ஷன் குரோவர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படத்தினை லைக்கா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் இன்று (ஜூலை 12)- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். படத்தை பார்த்துவிட்டு அவர்கள் சொன்ன விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன் ஒருவர் ” இந்தியன்2  படம் ஒரு மோசமான திரைப்படம். இந்த படம்  உருவாக்குவது மன்னிக்கப்படலாம், ஆனால் ஒரு பெரிய சின்னமான கதாபாத்திரத்தை படுகொலை செய்வதை மன்னிக்க முடியாது. ஷங்கரின் சிறந்த மற்றும் மோசமானது இப்போது இந்தியன் படங்கள் தான்.  இது ஒரு பெரிய ஏமாற்றம்” என கூறியுள்ளார்.

unknown node

படத்தை பார்த்த மற்றோருவர் “கண்ணியமான கதையை கையில் வைத்திருக்கும் ஒரு இயக்குனரும் தயாரிப்பாளரும் ஒரு படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கும் தற்போதைய டிரெண்டைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் என்ன நடக்கும்? பதிலை அறிய இந்தியன்2 பார்க்கவும். பல பாகங்களாக படம் எடுக்க நினைக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் இந்த படம் ஒரு கேஸ் ஸ்டடியாக இருக்க வேண்டும்.

கமல்ஹாசன் படத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. க்ளைமாக்ஸின் போது ‘சிக்ஸ் பேக்ஸ்’ அபி சண்டைக் காட்சியை அவரது ரசிகர்கள் விரும்பலாம்.மொத்தத்தில் இந்தியன்2 & ஷங்கர் ஏமாற்றம்” என் கூறியுள்ளார்.

unknown node

மற்றோருவர்”அதிர்ச்சி! #இந்தியன்2 படத்திற்கு வெளிநாடுகள் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன” என கூறியுள்ளார்.

unknown node

மிகவும் காலாவதியான படம். பிரம்மாண்டமான காட்சிகள், படைப்பாற்றல் இல்லை, பின்னணி இசை ஓகே.எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஸ்கோப் இல்லை. முழுவதும் பயங்கரமான காட்சிகள். கிளைமாக்ஸ் ஃபைட் மட்டும் தான். ஷங்கர் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்” என கூறியுள்ளார்.

மற்றோருவர் “இந்தியன்2 ஒரு சிறந்த திரைப்படம். கமல்ஹாசன், சித்தார்த், விவேக் மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோரின் சிறப்பான நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. ஷங்கர் படத்தில் கதை சொன்ன விஷயம் மயக்க வைக்கும் காட்சிகள் கண்டிப்பாக பார்க்கும் ஆவலை தூண்டுகிறத” என கூறியுள்ளார்.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node