தளபதி 66 இசையமைப்பாளர் இவரா.? லேட்டஸ்ட் தகவல் இதோ.!

தளபதி 66 படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

தளபதி 66 படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நேற்று முன்தினம் தளபதி 66 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, அதன்படி, விஜயின் 66 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபல்லி இயக்குகிறார். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

unknown node

இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தளபதி 66 அறிவிப்பு வெளியானதிலிருந்து வழக்கம் போல் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த தகவல்கள் பரவி வருகிறது.

unknown node

அந்த வகையில், தளபதி 66 படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது. அதன்படி, தளபதி 66 படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

unknown node

மேலும் இசையமைப்பாளர் தமன் கடந்த மார்ச் மாதம் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடி கொண்டிருந்தார்.. அப்போது ரசிகர் ஒருவர் விஜய்யுடன் உங்கள் கூட்டணியை விரைவில் எதிர்பார்க்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘ஆம்’ என்று இசையமைப்பாளர் தமன் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.