புத்தாண்டு தினத்தில் தளபதி 65 அப்டேட்..?

It has been reported that there is a high chance that Vijay will be paired with Vijay in the film 65 on New Year's Day.

விஜயின் 65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்பது குறித்து அப்டேட் வருகின்ற புத்தாண்டு தினத்தன்று அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதனை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை .

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65வது படத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அனிருத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அதற்கு பிறகு தளபதி 65 குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் தற்போது வருகின்ற புத்தாண்டு தினத்தன்று தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பது குறித்து அப்டேட் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக சமூக வளைத்தளத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது.