தளபதி 65 படத்தின் தாறுமாறான லேட்டஸ்ட் அப்டேட்..!

An update on the cast and crew of thalapathy 65 will be released this week.

தளபதி 65 படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறித்த அப்டேட் இந்த வாரம் வெளியாகவுள்ளதாக.

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் தளபதி 65 படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறித்த அப்டேட் இந்த வாரம் வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள்,