தளபதி 65 படத்திற்கான தலைப்பு என்ன தெரியுமா..??

It has been reported that thalapathy 65 will be titled as Target King for the film.

தளபதி 65 படத்திற்கு டார்கெட் ராஜா என்று டைட்டில் வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு சட்டமன்ற தேர்தல் முடித்து வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில், பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் வைத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதைத்தொடர்ந்து வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான டைட்டில் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் இந்த படத்திற்கு டார்கெட் ராஜா டைட்டில் முன்னதாக வைக்க முடிவு செய்திருந்த நிலையில் தற்போது அந்த டைட்டில் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.