தலைவர் 170 அப்டேட்! அசத்தல் லுக்கில் ரஜினிகாந்த்…இணையத்தை அதிர வைத்த புகைப்படம்!

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து உற்சாகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கி ஹிட் கொடுத்த டி. செ. ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரக்ஷன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவ்வளவு பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இந்த பிரபலங்கள் எல்லாம் நடித்து வருவதன் காரணமாகவும், படத்தை இதற்கு முன்பு ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கும் காரணத்தாலும் இந்த ‘தலைவர் 170’ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் பற்றி ரஜினிகாந்தும் மக்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு நிறைந்த கருத்துள்ள படம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் படப்பிடிப்பு தளத்தில் அமிதாப்பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியீட்டு அறிவித்துள்ளது .
முன்னதாக படப்பிடிப்பில் கலந்துகொண்ட சமயத்தில் அமிதாப் பச்சன் படப்பிடிப்பில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியீட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய குருவுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என கூறியிருந்தார். ஏனென்றால், 32-ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் ‘தலைவர் 170’ படத்தின் மூலம் இணைந்துள்ளனர். கடைசியாக கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான ஹம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025