"அன்பே அமுதே ஆருயிரே " வலிமை அப்டேட் தந்த போனி கபூருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்.!

thala fans have created a poster thanking Boney Kapoor for giving her valimai update.

வலிமை அப்டேட் தந்த போனி கபூருக்கு தல ரசிகர்கள் நன்றி தெரிவித்து போஸ்டர் உருவாக்கியுள்ளனர்.

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வருட காலமாக வலிமை படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் நேற்றைய தினம் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்கை தல அஜித்தின் 50-வது பிறந்தநாள் தினமான மே 1-ம் தேதி வெளியிட உள்ளதாக போனி கபூர் அறிவித்திருந்தார் .இது தல ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.போனி கபூர் வலிமை அப்டேட் அறிவித்த நிலையில் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வரும் ரசிகர்களில் மதுரையை சேர்ந்த ஒருவர் போனி கபூருக்கு நன்றியை தெரிவித்து போஸ்டர் ஒன்றை உருவாக்கி உள்ளனர் .அதில் “அன்பே அமுதே ஆருயிரே..போனியே தல-60 வலிமை அப்டேட் 3 மணிக்கு ட்வீட் செய்த சாமியே” என்று போனி கபூரின் ட்வீட் டையும் போஸ்டரில் இணைத்து மதுரையை சேர்ந்த தூங்கா நகரம் அஜித் ரசிகர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.தற்போது அந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது

unknown node
"அன்பே அமுதே ஆருயிரே " வலிமை அப்டேட் தந்த போனி கபூருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்.!