தல அஜித் படத்தை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்..!

Actor Rajini has praised the trailer of the movie Nerkonda Parvai starring Ajith.

அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலரை நடிகர் ரஜினி பார்த்துவிட்டு புகழ்ந்து கூறியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹெச்.விந்தோ இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், வித்யா பாலன், ஆண்ட்ரியா தாரியாங், அர்ஜுன் சிதம்பரம், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.

இந்த நிலையில் , தல அஜித்தின் நெருங்கிய நண்பர் சிற்றரசு ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் பணிபுரியும்போது ரஜினி நேர்கொண்ட பார்வை படத்தை புகழ்ந்து கூறியதாக சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  “நேர்கொண்ட பார்வை டிரைலர் மிகவும் அருமையாக இருக்கிறது. அஜித் சூப்பரா பண்ணிருக்காரு. இயக்குனர் செமயா பண்ணிருக்காரு என்றும் ரஜினி கூறியதாக சிற்றரசு கூறியுள்ளார்.

தல அஜித் படத்தை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்..!