தல 61 படத்தை குறித்த லேட்டஸ்ட் அப்டேட்..??

Director H Vinod is all set to direct actor Ajith Kumar's 61st film.

நடிகர் அஜித்குமாரின் 61 வது திரைப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்குவது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் 10 நாட்கள் மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடப்படவுள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின்  61 வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்பதை குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்குவது உறுதியாகி விட்டதாகவும், அந்த திரைப்படத்தை கோகுலம் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.