ரிலீஸ் தேதியிலிருந்து பின்வாங்கினார் அருண் விஜய்! 'தடம்' பாடல்கள் மற்றும் ரிலீஸ் அப்டேட்ஸ்!!!

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க வெகு காலமாக போராடி தற்போது அந்த நிலையை அடைந்துள்ளார் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் 'தடையற தாக்க' படம் நல்ல

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க வெகு காலமாக போராடி தற்போது அந்த நிலையை அடைந்துள்ளார் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் ‘தடையற தாக்க’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இந்த படத்தின் விறு விறு திரைக்கதையும், சண்டை காட்சிகளும் நல்லவிதமாக பேசப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அதே கூட்டணி ‘தடம’ படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து படத்தின் படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

unknown node

ஆனால் தற்போது திடீரென படத்தின் ரிலீஸ் தேதி மார்ச்சிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்த படத்தின் பாடல்கள் நளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

DINASUVADU